வாழ்வியல்

மனிதனின் எண்ணமும் நினைவும்

Thought and Memory

புதுக்கவிதை

எண்ணிக் கொண்டிருப்போம்!கடலின் சிந்தனையாய்எழும்பியடங்கும் அலைகள்உணர்த்துகின்றனகடலின் வீரியத்தை!

மரத்தின் சிந்தனையாய்துளிர்க்கும் இலைகள்உணர்த்துகின்றனமரத்தின் பசுமையை!

நெருப்பின் சிந்தனையாய்உமிழப்படும்வெளிச்சமும் வெப்பமும்நெருப்பின் ஆற்றலைஉணர்த்துவதைப் போல...

நம் எண்ணங்களேஉணர்த்துகின்றனநம்மை, நமக்கும்பிறர்க்கும்!

நினைவில்வைத்துக் கொள்வோம்...சித்திரம் என்பதுவண்ணங்கள் அன்றிவேறில்லை என்பது போல...நாம் என்பதுநம் எண்ணங்கள் அன்றிவேறில்லை என்பதை!

துயரத்திற்குஅழைத்துச் செல்லும்நம் துவண்டஎண்ணங்களுக்கு மாறாகஉயரத்திற்கு அழைத்துச்செல்லத் தெரிந்தவைநம் உத்வேக எண்ணங்கள்!

நமக்குள்ளேதோன்றி மறைந்தாலும்நம்மை நிழலாக்கிவிட்டுதம்மைநிஜமாக்கிக் கொள்ளும்தந்திரமிக்கவை அவைஎன்பதால்...

எத்தனை என்றுமட்டுமல்லஎத்தகையது என்றும்எண்ணிக் கொண்டேயிருப்போம்ஒவ்வொரு கணமும்நமக்குள் தோன்றுகிறஎண்ணங்களை!

— ரா. பார்த்தசாரதி

இன்னொரு கவிதை பறி (random poem)

வாழ்வியல் தோட்டத்திலிருந்து

எல்லாம் →