வாழ்வியல்

வாழ்க்கை ஒரு வரம்!

Life Is a Gift

புதுக்கவிதை

அனைவருக்கும்அளிக்கப்பட்டிருக்கும்அற்புத வரம்அவரவரின் வாழ்க்கை!

பிழைக்க வழியில்லையெனபிதற்றுபவன்உழைப்பை உதாசீனப்படுத்துகிறஉதவாக்கரை!

உழைக்கத் தெரியாதவனுக்குஎன்றும்பிழைக்கும் வழி தெரிவதில்லை!

வாழ்க்கைச் சுமைகளைபாரங்களாய் எண்ணிஓரமாய் ஒதுங்க நினைப்பவன்துன்பச் சுமைகளைதோள்களில் ஏற்றிதொலை தூரம் சுமக்கிறான்!

வாழ்க்கையைவரமாய் எண்ணிவாழ்பவனுக்குவறுமைக் காலங்கள் கூடவசந்த காலங்களாய்வரவேற்பு கம்பளங்கள் விரிக்கும்

பெருங்காற்றிலும்அசையாது நிற்கும்மண்ணின் மலைத்தொடர் போல்பெருஞ்சோதனைகளிலும்மனத்திடமேஎதிர்கால மகிழ்ச்சிக்குமன்றம் அமைத்துதென்றல் வீசும்!

விதையைவிருட்சமாக்கும்வித்தையைக் கற்றுக் கொள்பவனேவித்தகக் கலைஞனாய்வியாபிக்கிறான்!

தன்னம்பிக்கையெனும்மூன்றாம் கையைதக்க வைத்துக் கொண்டால்தாராளமாய் வாய்ப்புகள்தக்க சமயத்தில்உன் தலைக்குமாபெரும்மகுடம் சூட்டும்!

லட்சியக் கனவுகள்கலைந்து போகாமல்லாவகமாய்அடைகாக்ககற்றுக் கொள்ளும் போதுநிச்சயமான வெற்றிநிதமும் உன்னைத் தேடும்!

— ரா. பார்த்தசாரதி

இன்னொரு கவிதை பறி (random poem)

வாழ்வியல் தோட்டத்திலிருந்து

எல்லாம் →