பொங்கலின் வண்ணக்கோலங்கள்
Pongal's Coloured Kolams
புள்ளியிலே ஆரம்பித்து புள்ளியிலே முடியும் புள்ளிக் கோலங்கள்,
கோடுகளை இணைத்துப் போடும் கோலங்கள்,புதுமையாக நாம் காணும் வடிவங்கள் !
கோலங்கள் பண்டிகைகளுக்காக மாறும் வண்ணங்கள்,அதுவே பெண்களுக்குரிய கை வண்ணங்கள் !
இதயத்தையும் , மனதையும் கவர்ந்திடும் கோலங்கள்,மகாலட்சுமி அழைப்பதர்கான விடியற்காலை கோலங்கள் !
காலங்களும், கோலங்களும் என்றும் மாறும்,கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !
இல்லத்தில் கோலம் போடுவதே மகாலக்ஷ்மியின் தரிசனம்மனித வாழ்கையில் சலனம் போக்குவதே தெய்வதரிசனம் !
வெள்ளிகிழமை. விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்,இறைவன் பெயரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்!
பொங்கலன்று சென்னையில் பல வண்ண கோலங்கள,மனிதனின் மனதில் தோன்றிடுமே நல்ல எண்ணங்கள் !
— ரா. பார்த்தசாரதி