காதல் மட்டும் சுகமே
Only Love Is Sweet
எனக்காகமணவறையில்கண்ணீர்விட்டபோதுகாதல் சுகம்தான்-ஆனால்
இனி இந்தகாதல் எனதில்லையே!......
என்னை தேடி அலையும்உனது ஈர விழியில்வாழ்கிறது நம் காதல்காதல் சுகமானது.....
இனி இந்தகாதல் எனதில்லையே!......
உன் விழியின் ஈரம்சொல்கிறதுஎன் மேல் உள்ள காதலைகாதல் சுகமானது............
இனி இந்தகாதல் எனதில்லையே!......
காதலனை கைவிட்டுகணவனை கைபிடித்த நீவாழ்க பல்லாண்டு !
அனல் பறக்கும்கோபங்கள் ஏன்?
சின்னதாய்சிரிக்ககூடதா?
மௌனம் என்றஇடி எதற்குசில வார்தைகள்பேசக்கூடாதா ?
உன்னில்இதுவும் பிடித்திருக்கு......
கோபம் தாண்டிஉன் புன்னகைஇதுதான் காதலா ?......
சொல்லவரும் வார்த்தைகள்காணாமல் போகின்றனபெண்ணே உன் கண்ணைகாணும்போதெல்லாம்
என் வார்த்தைகளுக்குமதிப்பில்லாமல் போகிறதுஅன்பே நீ பேசும் போதெல்லாம்
உயிருடன் இருந்தும்இறந்தது போகிறேன்கண்ணே நீ என்னைவெறுக்கும் போதெல்லாம்
சொல்லாமல் தவிக்கிறேன்நீ என்னைகடந்து செல்லும் போதெல்லாம்
உன்விழிகள்என் வார்த்தைகளைகொள்கிறது
உன் பார்வைஎன்னையும் என்காதலையும்கொள்கிறது
வெற்றி பெற்றவனுக்குஅமுதம்தோல்வி கண்டவனுக்குஆழகால விசம்இதை தெரிந்தும் தெரியாமல்வாழ்பவனுக்குபுரியாத புதிர்
ஏன் இந்த ஆரவாரம்ஏன் இந்த சந்தோசம்ஏன் இந்த இன்ப மழை
இன்பம் நிலையில்லைதுன்பம் மட்டும் வாழ்வில்லைஇப்பொழுதுதான் தடுமாறுகிறதுஎன் இதயம் -காரணம்காதல் மட்டுமே .........
— ரா. பார்த்தசாரதி